3வது டெஸ்ட் போட்டி- 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா

டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்களில் டிக்ளேர் செய்தது.
3வது டெஸ்ட் போட்டி- 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா
Published on

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.

தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. 

557 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

வெற்றியை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com