WTC புள்ளிப்பட்டியல்: இலங்கை, பாகிஸ்தானை விட மோசம்... 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.WTC போட்டிகளில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.
WTC புள்ளிப்பட்டியல்: இலங்கை, பாகிஸ்தானை விட மோசம்... 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!
Published on

கவுகாத்தி:

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.

288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 549 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

549 ரன் என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தோல்வியால் இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதனால் வெற்றியின் சதவீதம் 48.15 ஆகும். இதன் அடிப்படையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் 100 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. 3-வது 4-வது இடங்கள் முறையே இலங்கை பாகிஸ்தான் அணிகள் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com