ஜூலை மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே பயணம்

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
ஜூலை மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே பயணம்
Published on

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டிகள் முறையே ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.

கடைசியாக 2024-ம் ஆண்டு இந்திய அணி, ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி அதில் 4-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com