4வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
iyer, hope
Published on: 
Summary

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா முன்னிலை

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஷாய் ஹோப் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 3வது போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

4-வது டி20 போட்டி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4வது டி20 போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்குகிறது.

இந்திய அணி விவரம்

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, நமன் தீர், நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.

X

Maalai Malar
www.maalaimalar.com