ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
Published on

ஹராரே:

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com