இந்தியா-ஜப்பான் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இது.
india, japan
Published on
Summary

ஜப்பானுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியா - ஜப்பான்

ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது.

இந்தியா, ஜப்பான் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டு ஆன நிலையில் அதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே இந்த டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தியா - ஜப்பான் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

டாஸ் தாமதம்

ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.

இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில், மோசமான வானிலையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

போட்டி 5 ஓவராக குறைப்பு

வானிலை சீரான நிலையில் காலை 11.45 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி 5 ஓவராக குறைக்கப்பட்டது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com