3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் உடன் இன்று மோதல்: தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.
shreyas iyer, shai hope
Published on: 
Summary

இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

சமநிலை

லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

அத்துடன், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணியின் வெற்றிப் பயணத்துக்கும் அந்த அணி முற்றுப்புள்ளி வைத்தது.

வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா?

முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 171 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய இந்திய அணி, அந்த இலக்கை 5 ஓவர் மீதமிருந்த நிலையில் எளிதாக எட்டியது. ஆனால், 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் இலக்கை நிர்ணயித்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.

கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் செய்த தவறுகளை சரிசெய்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் போராடும் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com