

இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை 2-2 என சமனிலைக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது.
கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் செய்த தவறுகளை சரிசெய்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்திய அணி வீரர்கள் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு தொடரில் ஷாய் ஹோப் 2 சதங்கள், ஒரு அரை சதம் உள்பட 261 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 4 போட்டியில் விளையாடி ஒரு சதம் உள்பட 159 ரன்கள் எடுத்துள்ளார். முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் (102) விளாசினார்.
தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.