நாளை கடைசி டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?

முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
shubman gill
Published on

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கடைசி டெஸ்ட்

இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

இந்திய அணி விவரம்:

ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சர்ப்ராஸ் கான், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி, குர்னூர் பிரார்

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன்செய்ய இலங்கையும் போராடும் என்பதால் இந்த டெஸ்ட்டில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் ஆல்-ரவுண்டரான சஹான் அரச்சிகே, பேட்ஸ்மேன் கமில் மிஷாரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரமேஷ் மெண்டிசுக்கு பதில் சஹான் அரச்சிகே அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். அரச்சிகே இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டி, ஒரு டி 20 ஆட்டத்தில் விளையாடி உள்ளார். கடந்த மாதம் இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியின் கேப்டனாக அரச்சிகே செயல்பட்டு இருந்தார். அவர், அந்தத் தொடரில் 209 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்தார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கமில் மிஷாரா, நிஷான் பெர்னாண்டோவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த தினேஷ் சண்டிமால் சேர்க்கப்படவில்லை. அவரது இடத்தில் பசிந்து சூரியபண்டாரா தொடர்கிறார்.

இலங்கை அணி விவரம்:

தனஞ்செய டி சில்வா (கேப்டன்), லஹிரு உதாரா, பசிந்து சூரியபண்டாரா, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷாரா, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெலா, சஹான் அரச்சிகே, கேஷரா நுவந்தா, பிரபாத் ஜெயசூரியா, மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா, அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com