

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லுமா? என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் 1 பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 16 போட்டியில் மோதி உள்ளன. இதில் இந்தியா 13 ஆட்டத்திலும், பாகிஸ்தான் 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய மகளிர் அணி விவரம் வருமாறு:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமீமா ரோட்ரிக்ஸ், பார்தி புல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யஸ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர், கிரந்தி கவுட், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ்.