ஜூனியர் ஆசிய கோப்பை: நாளை அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதல்

நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் வங்கதேசத்தை சந்திக்கிறது.
team india
Published on: 
Summary

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

முதல் லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2வது லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் ஆர்யவீர் சேவாக்கின் அதிரடி சதத்தால் ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.

நாளை அரையிறுதி

இந்நிலையில், நாளை நடைபெற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. தொடக்க வீரரான ஆர்யவீர் சேவாக்கின் அதிரடி தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. வரும் 14-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

X