

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 2035-ஆம் ஆண்டு வரையிலான ஆண்களுக்கான முக்கிய கிரிக்கெட் தொடர்களுக்கான கால அட்டவணையை அங்கீகரித்தது. இதன்படி, 2029-ஆம் ஆண்டு அக்டோபர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவும், 2031-ஆம் ஆண்டு அக்டோபர் 9 முதல் நவம்பர் 23 வரை நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்தியாவும் மற்றொரு நாடும் இணைந்து நடத்துகின்றன.
2006-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தவுள்ளது. அதேபோல், 2031-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என்பதும் ஐசிசியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்தியிருந்தது; 2027-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரையும் அதே மாதங்களில்தான் நடைபெறவுள்ளது. 2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா மற்றும் வங்கதேசம் இணைந்து நடத்துகின்றன.
இருப்பினும், 2031-ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறவுள்ள தொடர்களுக்கான நடத்தும் நாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அவற்றுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த உறுதிப்படுத்தப்பட்ட கால அட்டவணை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 2028 டி20 உலகக் கோப்பையில் தொடங்கி, 2035 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீடிக்கிறது.
2028: டி20 உலகக் கோப்பை – ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து (அக்டோபர் 12 – நவம்பர் 12)
2029: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – இங்கிலாந்து (ஜூன் 8-12)
2029: சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா (அக்டோபர் 9-28)
2030: டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து (ஜூலை 4 – ஆகஸ்ட் 4)
2031: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இங்கிலாந்து (ஜூன் 12-16)
2031: கிரிக்கெட் உலகக் கோப்பை – இந்தியா மற்றும் வங்கதேசம் (அக்டோபர் 9 – நவம்பர் 23)
2032: டி20 உலகக் கோப்பை – நடத்துபவர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை (அக்டோபர் 14 – நவம்பர் 14)
2033: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – நடத்துபவர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை (ஜூன் 9-13)
2033: சாம்பியன்ஸ் டிராபி – நடத்துபவர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை (அக்டோபர் 2-23)
2034: டி20 உலகக் கோப்பை – நடத்துபவர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை (ஜூலை 6 – ஆகஸ்ட் 6)
2035: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – நடத்துபவர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை (ஜூன் 7-11)
2035: கிரிக்கெட் உலகக் கோப்பை – நடத்துபவர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை (அக்டோபர் 2 – நவம்பர் 18).