ராஞ்சி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு: 3-ம் நாள் முடிவில் இந்தியா 40/0

இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.
ராஞ்சி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு:  3-ம் நாள் முடிவில் இந்தியா 40/0
Published on

ராஞ்சி:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com