

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியானது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து கவுகாத்தியில் 30ம் தேதி, நியூ சண்டிகரில் அக்டோபர் 3-ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
டி20 போட்டிகள் அக்டோபர் 6, 9, 11, 14, 17 ஆகிய தேதிகளில் லக்னோ, ராஞ்சி, இந்தூர், ஐதராபாத், பெங்களூரில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அணியில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் தனது திறமைக்கேற்ற வகையில் செயல்படாததால் தேர்வு செய்யவேண்டாம் என தேர்வுக் குழுவினரிடம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியது.
ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்படாத ரிஷப் பண்ட், இரானி கோப்பைப் போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி சாம்பியனான ஜம்மு-காஷ்மீர் - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஸ்ரீநகரில் நடக்கிறது.