

இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்குகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரண்ஷ் ஜெயின் அறிமுகம் ஆகிறார்.
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சரண்ஷ் ஜெயின்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன்செய்ய இலங்கையும் போராடும் என்பதால் இந்த டெஸ்ட்டில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.