ஷாய் ஹோப் அசத்தல் சதம் - இந்தியா வெற்றி பெற 312 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களை எடுத்தது.
சதமடித்த ஷாய் ஹோப்
சதமடித்த ஷாய் ஹோப்
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்:

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதமடித்து 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com