முதல் அரையிறுதி: இந்தியா வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
முதல் அரையிறுதி: இந்தியா வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
Published on

துபாய்:

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

டிராவிஸ் ஹெட் 39 ரன்னும், லபுசேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com