சிக்சர் மழையில் கிளென் பிலிப்ஸ் சதம்: இந்தியா வெற்றிபெற 260 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் சிக்சர் மழை பொழிந்து அதிரடியாக ஆடி சதமடித்தார்.
glenn phillips
Published on: 
Summary

நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 260 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 3-0 என தொடரை கைப்பற்றியது.

டாஸ் வென்ற இந்தியா

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டிம் செபர்ட் 3 ரன்னும், பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்னும் எடுத்து வெளியேறினர். டேரில் மிட்செல் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு பின் ஆலன்-கிளென் பிலிப்ஸ் ஜோடி 59 ரன்கள் சேர்த்தது.

அடுத்து இறங்கிய பெவன் ஜேக்கப்ஸ் 7 ரன்னில் அவுட்டானார்.

கிளென் பிலிப்ஸ் சதம்

5வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ்-பிரேஸ்வெல் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 40 பந்தில் 115 ரன்கள் குவித்தது.

பிரேஸ்வெல் 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 46 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்சர், 4 பவுண்டரி அடங்கும்.

இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா சார்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டும், பிரின்ஸ் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

X