

முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் 24 ரன்னில் அவுட்டானார். பின் ஆலன் 24 பந்தில் 45 ரன்கள் குவித்து வெளியேறினார். டேர்ல் மிட்செல் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கிளென் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. கிளென் பிலிப்ஸ் 40 பந்தில் 82 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 32 பந்தில் 73 ரன்கள் குவித்தது.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.