டேவிட் மலான், லிவிங்ஸ்டோன் அதிரடி - இந்தியா வெற்றி பெற 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 77 ரன்களை குவித்தார்.டேவிட் மலான், லிவிங்ஸ்டோன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்தனர்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜேசன் ராய்
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜேசன் ராய்
Published on

பர்மிங்காம்:

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் 18 ரன்னிலும், ஜேசன் ராய் 27 ரன்னிலும், பிலிப் சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடிய மலான் பின்னர் அதிரடியில் இறங்கி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்து அவுட்டானார். மொயீன் அலி டக் அவுட்டானார்.

லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com