டேரில் மிட்செல் அதிரடி: இந்தியா வெற்றிபெற 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

நியூசிலாந்தின் டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து ரன்கள் குவித்தார்.
mitchell
Published on: 
Summary

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இந்தியா

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் மீண்டும் இடம்பிடித்தார்.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டிம் செபர்ட் 2 ரன்னும், அதிரடியாக ஆடிய பின் ஆலன் 40 ரன்னும் எடுத்து வெளியேறினர். கிளென் பிலிப்ஸ் 17 ரன்னில் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு பின் ஆலன் - டேரில் மிட்செல் ஜோடி 86 ரன்கள் குவித்தது.

டேரில் மிட்செல் அரை சதம்

4வது விக்கெட்டுக்கு டேரில் மின்செல், பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 48 பந்தில் 75 ரன்கள் குவித்தது.

இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்துள்ளது.

டேரில் மிட்செல் 52 பந்தில் 89 ரன் குவித்தார். பொறுப்புடன் ஆடிய பெவன் ஜேக்கப்ஸ் 23 பந்தில் 39 ரன் எடுத்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், நிதிஷ்குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com