ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல அவுட்டானது.
ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
Published on

துபாய்:

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பர்ஹான் 57 ரன்னில் அவுட்டானார். பகர் சமான் 47 ரன்னில் வெளியேறினார்.

ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com