3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

பிரதிகா ராவல், ஷபாலி வர்மா ஆகியோர் அரை சதமடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
india women
Published on: 
Summary

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

131 ரன்னுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 39.5 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக முபாசிக்வா 37 ரன்னும், ஜோசபின் 35 ரன்னும் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்

இந்தியா சார்பில் வைஷ்ணவி ஷர்மா 5 விக்கெட்டும், கிராந்தி கவுட், சயாலி சத்கரே தலா விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார்.

2வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல் ஜோடி 59 ரன்கள் சேர்த்தது. ஹர்லீன் தியோல் 19 ரன்னில் அவுட்டானார்.

3வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவலுடன் ஷபாலி வர்மா இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.

இறுதியில், இந்திய மகளிர் அணி 17 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 59 ரன்னும், ஷபாலி வர்மா 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

ஆட்ட நாயகி விருது வைஷ்ணவி சர்மாவுக்கும், தொடர் நாயகி விருது பிரதிகா ராவலுக்கும் அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com