ஆசிய விளையாட்டு: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா

அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 22 பந்தில் 51 ரன் குவித்தார்.
sundar
Published on: 
Summary

ஆசிய விளையாட்டு ஆண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்கள் கிரிக்கெட்டில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.

இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதிரடியில் மிரட்டிய இந்தியா

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 28 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.

திலக் வர்மா அரை சதம்

அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 22 பந்தில் 51 ரன்னும், ஷிவம் துபே 15 பந்தில் 27 ரன்னும் குவித்தனர். வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பாகிஸ்தான் சார்பில் அராபத் மினாஸ், அகமது டானியல் தலா 2 விக்கெட்டும், சயீம் அயூப், அப்ரார் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. 39 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

போராடிய ஹாசன் நவாஸ்

4வது விக்கெட்டுக்கு சயீன் அயூப் உடன் இணைந்த ஹாசன் நவாஸ் 87 ரன் சேர்த்த நிலையில், சயீம் அயூப் அ29 ரன்னில் அவுட்டானார்.

கடைசி வரை போராடிய ஹாசன் நவாஸ் 96 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

தோல்வி அடைந்த பாகிஸ்தான் வெள்ளிப் பதக்கம் வென்றது.

இந்தியா சார்பில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 19 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 80 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com