

சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், நமன் தீரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் 24 ரன்னில் அவுட்டானார். பின் ஆலன் 24 பந்தில் 45 ரன்கள் குவித்து வெளியேறினார். டேர்ல் மிட்செல் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கிளென் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. கிளென் பிலிப்ஸ் 40 பந்தில் 82 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 32 பந்தில் 73 ரன்கள் குவித்தது.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 29 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடினார். அவர் 28 பந்தில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய நமன் தீர் 15 பந்தில் சிக்சர், 5 பவுண்டரியுடன் 42 ரன் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதியில், இந்திய அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.