

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இது.
இன்றைய போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதத்திற்கு முன்பே வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் தான் இசைக்கப்படும். ஆனால், இன்றைய போட்டியில் வழக்கத்து மாறாக தேசியம் கீதம் இசைக்கப்படுதற்கு முன்பே வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தார். ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.
வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேந்த ஆடிய இஷான் கிஷன் 33 பந்துகளில் 42 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 82 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார். இந்திய அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.