

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய விப்ராஜ் நிகம் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விப்ராஜ் நிகம் வீடு உள்ளது. இவர் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.
நேற்று இவரது வீட்டின் முன் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது விப்ராஜ் நிகம் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த பெண் அவரது வீட்டிற்கு வெயில் இருந்தார். இதனால் விப்ராஜ் நிகம் குடும்பத்தினர் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பெண் தர்ணாவில் ஈடுபட்டபோது விப்ராஜ் நிகம் தாயார் மட்டுமே வீட்டில் இருந்தார். விப்ராஜ் நிகம் தந்தை, அந்த பெண்ணுடன் போனில் பேசினார். அவர் இந்த விவகாரம் குறித்து பேசுவதாக உறுதி அளித்ததால், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தான் அங்கு பேசுவதற்காக மட்டுமே வந்ததாகவும், எந்தவொரு மோதலையும் உருவாக்க விரும்பவில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்தார்.
நவம்பர் 2025-ல், விப்ராஜ் நிகம் பாராபங்கியில் உள்ள கோட்வாலி நகரில் அந்தப் பெண்ணுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. பல சர்வதேச தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, தனது நிதி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, தன்னை அந்தரங்கப்படுத்தும் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, அப்பெண் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஒரு மாதம் கழித்து, அப்பெண் நொய்டா காவல்துறையில் ஒரு எதிர் வழக்கை பதிவு செய்து, அந்த கிரிக்கெட் வீரருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முறையாகப் பதிவு செய்தார். தனது புகாரில், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து நிகம் தன்னை மயக்கியதாக அவர் கூறினார்.
வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடாததால் ஒரேயொரு போட்டிக்காக விப்ராஜ் நிகம் ஜப்பான் சென்று இந்திய அணியில் இணைந்துள்ளார்.