ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் அரையிறுதி: டாஸ் வென்ற இந்தியா ஏ பேட்டிங் தேர்வு

அரையிறுதியில் இந்தியா ஏ அணியும், இலங்கை ஏ அணியும் மோதுகின்றன.
tilak varma
Published on: 
Summary

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரின் அரையிறுதியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்கதேசம் 'ஏ'. இலங்கை 'ஏ', ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா 'ஏ', நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம்பிடித்தன.

லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் முன்னேறின.

இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா ஏ அணியும், இலங்கை ஏ அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய ஏ அணி முதலில் களமிறங்குகிறது.

X