முதல் இன்னிங்சில் இந்தியா ஏ 113 ரன்னுக்கு ஆல் அவுட்: முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ஏ 135/3

நியூசிலாந்து ஏ அணியின் சைமன் கீன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
simon keene
Published on: 
Summary

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியின் முதல் நாளில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா ஏ, நியூசிலாந்து ஏ அணிகள் 3 நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடர் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் மற்றும் 3-வது போட்டிகள் லிங்கனிலும், இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா 113 ரன்னுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர். 4 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

இந்தியாவின் யஷ் ரத்தோட் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 77 பந்தில் 33 ரன் எடுத்தார்.

சைமன் கீன் 5 விக்கெட்

நியூசிலாந்து ஏ அணி சார்பில் சைமன் கீன் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டும், ஜாக் கிப்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து ஏ அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ரைஸ் மரியு 76 ரன் விளாசினார். கர்டிஸ் ஹீபி 37 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நியூசிலாந்து அணி 22 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா ஏ அணி சார்பில் அவ்கிப் நபி 2 விக்கெட்டும், முகேஷ் சவுத்ரி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com