

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின்ரிசர்வ் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 368 ரன்கள் குவித்தது. ஹென்ரி நிக்கோல்ஸ் 113 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 94 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடந்தது. நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார்.
மறுபக்கம் நிக்கோல்ஸ் நிதானமாக ஆடி ரன் குவித்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 368 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 85 ரன் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 52 ரன்னும், தேவ்தத் படிக்கல் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.