பவர்பிளேயில் 118 ரன் குவிப்பு: டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்தியா

இந்திய அணி வெறும் 2.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது.
abhishek, sooryavanshi
Published on: 
Summary

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 198 ரன் குவித்தது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 89 ரன்னும், பின் ஆலன் 40 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 13.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மாவும், வைபவ் சூர்யவன்ஷியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.

அபிஷேக் சர்மா சதம்

இப்போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதியில் 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்நிலையில், இந்திய அணி டி20 சர்வதேசப் போட்டிகளில் பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.

2.2 ஓவர்களில் 50 ரன்கள்

இந்திய அணி வெறும் 2.2 ஓவரில் 50 ரன்களை எட்டியது. இதன்மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 50 ரன்களை எட்டிய அணிகள் பட்டியலில் ஏற்கனவே இருந்த உலக சாதனையை இந்தியா சமன்செய்தது.

ருமேனியா சாதனை முறியடிப்பு

தொடர்ந்து 5 ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. இதற்குமுன் ருமேனியா அணி 5.2 ஓவரில் 100 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com