கொழும்பு டெஸ்ட்: துருவ் ஜூரல் அபார சதம்- முதல் இன்னிங்சில் இந்தியா 503/9 டிக்ளேர்

இந்தியா முதல் இன்னிங்சில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. துருவ் ஜூரல் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
துருவ் ஜூரல்
துருவ் ஜூரல்
Published on
Summary

கொழும்பு டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் (45), தேவ்தத் படிக்கல் (117), சுப்மன் கில் (50), ரிஷப் பண்ட் (63), ஜடேஜா (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரல் 7 ரன்களுடனும் ஜெய்ன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

துருவ் ஜூரல் அபாரம்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சரன்ஷ் ஜெய்ன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மானவ் சுதர் நிதானமாக விளையாடினார். இதற்கிடையே மறுமுனையில் துருவ் ஜூரல் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 97 பந்தில் அரைசதம் அடித்தார்.

மானவ் சுதர் 51 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து 9-வது விக்கெட்டுக்கு துருவ் ஜூரல் உடன் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 131.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது துருவ் ஜூரல் 155 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கால் இருந்தார்.

மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. துருவ் ஜூரல் 171 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜூரல் 177 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரசித் கிருஷ்ணா 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கேஷரா நுவந்தா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறார்.

காலே டெஸ்டில் இந்தியா வெற்றி

காலே டெஸ்டில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேவ்தத் படிக்கல் (167) சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 284 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்தியா 2-வது இன்னிங்சில் 193 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 66 ரன்கள் அடித்தார். பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 206 ரன்களில் சுருண்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com