

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
அக்டோபர் 22ஆம் முதல் நடைபெறவுள்ள இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 36 வயதாகும் வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக 2022ஆம் ஆண்டில்தான் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.
35 வயதாகும் வருண் சக்ரவர்த்திக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர், சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியபோது காயமடைந்தார்.
எனவே ஏசியன் கேம்ஸ் தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தியை நீக்கி ரவி பிஷ்னோயை சேர்த்தனர். இந்நிலையில், தற்போது பின்ஷோயை நீக்கி வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்