

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின்ரிசர்வ் ஸ்டேடியத்தில் நேற்று (நவ. 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழந்த நிலையில், நிக்கோல்ஸ் (113) மற்றும் பிலிப்ஸ் (94) வலுவான நிலையில், களத்தில் இருக்க நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கை தொடங்கியது.
இரண்டாம் நாளில் அதிக ரன்களை குவிக்க நினைத்த கிளென் பிலிப்ஸ் 118 ரன்களை எடுத்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
மறுப்பக்கம் நிக்கோல்ஸ் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். நிக்கோல்ஸ் 302 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 146 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். இவருடன் ஆடி வரும் நாதன் ஸ்மித் 41 பந்துகளில் 13 ரன்களை எடுக்க இரண்டாம் நாள் உணவு இடைவேளை விடப்பட்டது.
இதில் உணவு இடைவேளியின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்திருந்தது.
இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
மதிய உணவிற்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் 44 பந்துகளில் வெறும் 14 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து ஆகாஷ் தீப் வீசிய பவுன்சரில் கைல் ஜேமிசன், கே.எல். ராகுலுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 21 பந்தில் 11 ரன்கள் எடுத்திருந்தார். பும்ரா பந்துவீச்சில் மேட் ஹென்றி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
இறுதியாக ஹென்றி நிக்கோல்ஸ் கடுமையான போட்டியை வழங்கி ஆட்டமிழக்காமல் விளையாடி வந்தார். நிக்கோல்ஸ் 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 368 ரன்களுடன் ஆட்டத்தை முடித்தது.