டி20 போட்டியில் சாதனை படைத்த 44 வயதான இம்ரான் தாஹிர்

குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரங்பூர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 போட்டியில் சாதனை படைத்த 44 வயதான இம்ரான் தாஹிர்
Published on

வங்காளதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்

குல்னா டைகர்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ரங்பூர் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ரங்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி இம்ரான் தாஹிர் சுழலில் 141 ரன்னில் சுருண்டது. இதனால் ரங்பூர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் குறைந்த டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் இம்ரான் தாஹிர் 4-வது இடத்தில் உள்ளார். 44-வது வயதில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பிராவோ (624 விக்கெட்), ரஷித் கான் (556 விக்கெட்), சுனில் நரேன் (532) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இம்ராம் தாஹிர் உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com