ரூ.1 கோடியா என அதிர்ச்சியான அணிகள்... ILT20 தொடர் ஏலத்தில் UNSOLD ஆன அஸ்வின்

அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
ரூ.1 கோடியா என அதிர்ச்சியான அணிகள்... ILT20 தொடர் ஏலத்தில் UNSOLD ஆன அஸ்வின்
Published on

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும். இந்நிலையில், ஏலத்தில் அஷ்வினை எந்த அணியும் எடுக்கவில்லை.

அதே சமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BBL தொடரில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com