ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள்

விராட் கோலி 3ஆம் இடத்திலும், ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர் தரவரிசையில் பும்ரா 5வது இடத்தில் இருக்கிறார்.
இமாம்         பாபர்          கோலி
இமாம்         பாபர்          கோலி
Published on

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் இமாம் உல்ஹக், இந்திய வீரர் கோலியை பின்னுக்கு தள்ளி 815 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

சொந்த மண்ணில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 892 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 811 புள்ளிகளுடன் விராட் கோலி 3ஆம் இடத்திலும், 791 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர் தர வரிசையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலிய ஹேசில்வுட் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.இந்த தரவரிசையில் இந்தியாவின் பும்ராவிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com