ICC ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருது வெல்வாரா சோனல் தினுஷா?

முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
sonal dinusha
Published on
Summary

ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இலங்கையின் சோனல் தினுஷா, இங்கிலாந்தின் ஆலி ராபின்சன், வங்கதேசத்தின் ஹாசன் மஹமுத் ஆகியோர் இடம்பிடித்தனர்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இலங்கை அணியின் சோனல் தினுஷா,

இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் மற்றும் வங்கதேசத்தின் ஹாசன் மஹ்முத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சோனல் தினுஷா

இலங்கை அணியின் இளம் வீரர்களில் ஒருவரான சோனல் தினுஷா, இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் சதமடித்த சோனல் தினுஷா, இரண்டாவது இன்னிங்சில் 84 ரன் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 103 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 133 ரன்னும் எடுத்து அசத்தினார்.

ஆலி ராபின்சன்

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் முக்கியப் பங்காற்றினார். முதல் டெஸ்ட்டில் 8 விக்கெட்டும், இரண்டாவது டெஸ்ட்டில் 8 விக்கெட்டும் வீழ்த்தினார்.

ஹாசன் மஹ்முத்

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது வங்கதேசம்.

முதல் டெஸ்ட்டில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் மஹ்முத், முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

சோனல் தினுஷா, ஆலி ராபின்சன், ஹாசன் மஹ்முத் இவர்களில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதினை யார் வெல்லப் போகிறார்கள் என ரசிகர்கள் முடிவு செய்ய உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com