ஆஷஸ் தொடரில் விளையாடுவேனா என தெரியவில்லை: ஸ்டீவ் ஸ்மித்

அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பங்களிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
steve smith
Published on
Summary

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் விளையாடுவேனா என்பதே தெரியவில்லை என ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இங்கிலாந்து ஆஷஸ் தொடர்

அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற விரும்புகிறேன்.

ஆனால் அந்தத் தொடரில் நான் விளையாடுவேனா என்பதே எனக்குத் தெரியவில்லை. அதற்குத் தனது உடற்தகுதி அனுமதிக்க வேண்டும்.

கடந்த சில காலமாகவே ஒவ்வொரு தொடராகத்தான் எனது எதிர்காலத்தைப் பற்றி முடிவு செய்து வருகிறேன்.

அந்தத் தொடருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அங்கு ஒரு ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் அல்லது வென்றிருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

சவாலான ஆடுகளங்களில் விளையாடும்போது, அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு ரன்கள் குவிப்பதற்கான பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ளேன்.

அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பங்களிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

ரன்கள் எடுப்பது, கேட்ச்களைப் பிடிப்பது, தேவைப்படும் நேரங்களில் தலைமைத்துவப் பொறுப்புகளில் உதவுவது என அணிக்கு முழுமையாக பங்களிக்க முயற்சித்து வருகிறேன்.

தற்போது எனது முக்கிய இலக்கு ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பகுதியாக இருக்க முயற்சிப்பதுதான். கடந்த இரண்டு ஆண்டுகள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளன. ஓய்வுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com