21 மில்லியன் பார்வைகளை கடந்த பாகிஸ்தான் சிறுவனின் ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ

இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ 21 மில்லியன் பார்வைகளையும் 1.4 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது.
21 மில்லியன் பார்வைகளை கடந்த பாகிஸ்தான் சிறுவனின் ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ
Published on

பாகிஸ்தானில் ஒரு சிறுவனின் அபாரமான பேட்டிங் திறமை ஆன்லைனில் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவை ராசா மஹர் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் சிறுவன் ஒரு பந்தை கூட பின்னால் விடாமல் அடித்து நொறுக்கிறார். நாலாபுறமும் பந்தை பறக்கவிடுகிறார். சூர்யகுமார் யாதவ் மாதிரி கையை சுழற்றி விளாசிகிறார். இதில் சில ஹெலிகாப்டர் ஷாட்டுகளும் அடங்கும்.இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

"பவர் ஹிட்டிங்" என்ற தலைப்புடன், இந்த வீடியோ 21 மில்லியன் பார்வைகளையும் 1.4 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது. மேலும் நெட்டிசன்களின் பல கருத்துக்களுடன். ஒரு பயனர் எழுதினார், "சிறிய குண்டு, பெரிய குண்டுவெடிப்பு." ராஜஸ்தான் ராயல்ஸின் ஐபிஎல் அணியில் ரியான் பராக்கை மாற்றலாம் என்று சிலர் பரிந்துரைத்தனர். மற்றொருவர் சூர்யாவை ஒத்திருப்பதாகக் கூறினார். "எதிர்கால பேட்டுக்கு நல்வாழ்த்துக்கள் என கருத்துக்களை தெரிவித்தனர்.

ராசா மஹர், தனது இன்ஸ்டாகிராமில் 29 ஆயிரத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும் திறமையான சிறுவன் அவரது மருமகன் ஆவார். ராசா தனது மருமகனின் நம்பமுடியாத பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் பல வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com