IPL 2026 | யாருக்கு ஆதரவு: சர்பராஸ்- முஷீர் கான் தந்தை உருக்கமான பேட்டி

சிஎஸ்கே வீரர் சர்பராஸ் கான் மற்றும் பஞ்சாப் வீரர் முஷீர் கானின் தந்தை நௌஷாத் கான் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
IPL 2026 | யாருக்கு ஆதரவு: சர்பராஸ்- முஷீர் கான் தந்தை உருக்கமான பேட்டி
Published on

ஐபிஎல் 2026 தொடரில் இன்று 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

போட்டிக்கு முன்னதாக, சிஎஸ்கே வீரர் சர்பராஸ் கான் மற்றும் பஞ்சாப் வீரர் முஷீர் கானின் தந்தை நௌஷாத் கான் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தனது மகன் சர்பராஸ் கானை நேரில் காண நௌஷாத் கான் மைதானத்திற்கு வந்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு தந்தையாக, தனது மகன்கள் ஐபிஎல் போன்ற பெரிய மேடைகளில் விளையாடுவதைப் பார்ப்பதை விட பெரிய மகிழ்ச்சி வேறில்லை. அவர்கள் இந்த நிலைக்கு வரப்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இன்று கண் முன்னே வந்து செல்கின்றன.

சென்னை அணிக்கு எதிரான போட்டி என்பதால், தோனியிடம் இருந்து தனது மகன்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளது. மைதானத்தில் எந்த அணி வென்றாலும், ஒரு தந்தையாக தனது மகனின் வளர்ச்சியைப் பார்ப்பதே தனக்குக் கிடைக்கும் பெரிய வெற்றி" என அவர் கூறியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

மைதானத்திற்கு வெளியே நௌஷாத் கான் தனது மகன்களின் ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படங்களும், அவர் பேசிய உருக்கமான வீடியோக்களும் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com