டெஸ்டில் ஜோ ரூட் 18,000 ரன்கள் குவிப்பார்: மான்டி பனேசர் கணிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடம்.இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.
டெஸ்டில் ஜோ ரூட் 18,000 ரன்கள் குவிப்பார்: மான்டி பனேசர் கணிப்பு
Published on

லண்டன்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டு விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com