சையத் முஷ்டாக் அலி கோப்பை: அரியானாவிடம் வீழ்ந்தது தமிழ்நாடு

அரியானாவின் சஹல், நிஷாந்த் சிந்து தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
nishant sindhu
Published on: 

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்தூரில் இன்று நடந்த போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அமித் சாத்விக் 38 ரன்னும், பாலசுப்ரமணியன் சச்சின் 27 ரன்னும், ஷாருக் கான் 22 ரன்னும் எடுத்தனர்.

அரியானா சார்பில் சஹல், நிஷாந்த் சிந்து தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அரியானா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அர்ஷ் ரங்கா 10 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்.

அங்கித் ராஜேஷ்குமார் அதிகபட்சமாக 39 பந்தில் 43 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் நிஷாந்த் சிந்து 29 பந்தில் 37 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இறுதியில், அரியானா அணி 16.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் தமிழக அணி 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆட்ட நாயகன் விருது நிஷாந்த் சிந்துவுக்கு வழங்கப்பட்டது.

X