IPL 2026 | ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகிய ஹர்ஷித் ராணா

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் விளையாடவில்லை.தற்போது ஐபிஎல் தொடரை முழுமையாக தவற விடுகிறார்.
IPL 2026 | ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகிய ஹர்ஷித் ராணா
Published on

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா. இவரை மூன்று வடிவிலான இந்திய அணியில் ஆல்-ரவுண்டராக உருவாக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் இடம் பிடித்து விளையாடி வந்தார்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துடன் இந்தியா விளையாடியது. அப்போது ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து முழுமையாக விலகினார். அவருக்குப் பதில் முகமது சிராஜ் அணியில் இடம் பிடித்தார்.

ஐபிஎல் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் குணமாகாததால் ஐபிஎல் 2026 தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

தற்போதுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிஜுர் ரகுமானுக்கு மாற்ற வீரராக ஜிம்பாப்வேயின் முசாரபானியை ஒப்பந்தம் செய்தது. தற்போது ஹர்ஷித் ராணா விலகியுள்ளதால், அவருக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com