

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் அதிவேக இரட்டை சதமடித்து சாதனை படைத்தார்.
பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
ராவல்பிண்டியில் நடந்த இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ரன்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய கேப்டன் ஹாரி புரூக் அதிவேகமாக இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 114 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
அவர் 116 பந்துகளில் 10 சிக்சர், 21 பவுண்டரி உள்பட 202 ரன்கள் குவித்தார்.
ஏற்கனவே, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 117 பந்தில் இரட்டை சதம் விளாசி இருந்தார். அந்த சாதனையை தற்போது ஹாரி புரூக் முறியடித்துள்ளார்.
ஜோ ரூட் 69 ரன்னும், வில் ஜாக்ஸ் 66 ரன்னும், டாம் பாண்டன் 50 ரன்னும் எடுத்தனர்.