டெஸ்ட் பேட்டர் தரவரிசை: ஜோரூட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஹாரி புரூக்

டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.
டெஸ்ட் பேட்டர் தரவரிசை: ஜோரூட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஹாரி புரூக்
Published on

ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதன்படி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோரூட்டை (897) பின்னுக்கு தள்ளி சக நாட்டவர் ஹாரி புரூக் (898) முதல் இடம் பிடித்துள்ளார். இருவருக்கும் 1 புள்ளிகள் மட்டும் வித்தியாசம் ஆகும்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 3 இடங்கள் பின் தங்கி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

விராட் கோலி 6 இடங்கள் பின் தங்கி 20-வது இடத்திலும் ரோகித் சர்மா 5 இடங்கள் பின் தங்கி 31-வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பெரும் அளவில் மாற்றம் இல்லை. பும்ரா முதல் இடத்தில் தொடர்கிறார். இந்திய வீரர் அஸ்வின் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தையும் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com