ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்

பந்துவீச்சில் தீப்தி சர்மா தரவரிசைக்கான 735 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறியுள்ளார்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்
Published on

துபாய்:

ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக அரை சதம் கடந்தார்.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஷபாலி வர்மா 6வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு புள்ளி குறைந்து 2வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com