இளம் ஐசிசி தலைவர்.. ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து

நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.
இளம் ஐசிசி தலைவர்.. ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து
Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவுக்கு இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஐசிசி-ன் இளம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு வாழ்த்துகள். நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.

இவ்வாறு பாண்ட்யா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com