

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளரான ரபாடா விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ரபாடா விலகியுள்ளார்.
ரபாடா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலிருந்து விலகுகிறார் என்பதை கேப்டன் பவுமா உறுதிப்படுத்தினார்.
ரபாடாவுக்குப் பதிலாக ஆன்ரிச் நோர்ஜே அணியில் இடம்பிடித்துள்ளார்.
எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டேவிட் பெடிங்காம், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், மார்கோ யான்சென், வியான் முல்டர், சைமன் ஹார்பர், கேசவ் கமராஜ், ஆன்ரிச் நோர்ஜே