சாய் சுதர்சன், மில்லர் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தியது குஜராத்

முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
சாய் சுதர்சன், மில்லர் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தியது குஜராத்
Published on

அகமதாபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக

அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சகா 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 28 பந்தில் 36 ரன்கள் குவித்தார். சாய் சுதர்சன் 45 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com